அம்பிகா, மீனா, மீரா ஜாஸ்மினுடன் போட்டி போடும் விஜய்காந்த்!!

By Staff

Vijayakanth with Meera Jasmine
மரியாதை படத்தின் கதையை எனக்காகவே உருவாக்கினார் இயக்குநர் விக்ரமன். அவரது இந்த மரியாதைக்காக நான் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட விருதகிரி படத்தையே தள்ளி வைத்து விட்டேன் என்றார் விஜய்காந்த்

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் படம் மரியாதை. விக்ரமன் இயக்குகிறார். விஜய் ஆண்டனி இசை. விஜயகாந்த் ஹீரோவாகவும், இவருக்கு ஜோடியாக மீனா, மீரா ஜாஸ்மின் நடிக்கின்றனர். இதன் தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம நாராயணன், பிரமீட் சாய்மீரா சாமிநாதன் ஆகியோர் விழாவைத் தொடங்கி வைத்தனர்.

பிறகு விஜயகாந்த் பேசியதாவது:

டைரக்டர் விக்ரமன் எப்போதும் கதை எழுதிவிட்டு அதற்கேற்ற ஹீரோவை தேர்வு செய்வார். இதை அவரே பேட்டியில் கூறி இருக்கிறார்.

ஆனால் மரியாதை படத்தின் கதையை எனக்காகவே எழுதியதாக என்னிடம் கூறினார்.

அவரது அந்த மரியாதைக்கு பதில் மரியாதை செய்யவே நான் இயக்கி நடிக்கவிருந்த விருதகிரி படப்பிடிப்பை தள்ளி வைத்து விட்டேன்.

வானத்தைப் போல படத்தில் சண்டைக் காட்சி இல்லை. ரொம்ப சாதுவாக காட்டி விட்டேனோ என்ற வருத்தம் இருக்கிறது. எனவே இதில் சண்டை காட்சி வைத்திருக்கிறேன் என்றார் விக்ரமன்.

படப்பிடிப்பு தொடங்கிய பிறகு வேடத்தை மெருகேற்றிக் கொண்டே இருப்பார். அதற்காக ரீ ஷூட் செய்ததில்லை. இதில் மீரா, மீனா, அம்பிகா என 3 பேருடன் போட்டி போட்டு நான் நடிக்க வேண்டும். சவால்தான் எப்போதும் எனக்கு சுவாரஸ்மானது என்றார் விஜய்காந்த்.

வானத்தைப் போல படத்திற்கு ஜனாதிபதி விருது கிடைத்தது. விஜயகாந்த்துக்கும் விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். அரசியல் காரணமாக கிடைக்கவில்லை. மரியாதை படத்தில் அவரது நடிப்புக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்றார் இயக்குநர் விக்ரமன்.

விழாவில் சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா, கலைப்புலி எஸ்.தாணு, காஜா மைதீன், சிவசக்தி பாண்டியன், அன்பாலயா பிரபாகரன், இப்ராகிம் ராவுத்தர், எல்.கே.சுதீஷ், வெங்கட் பிரபு, அமீர், விஜய் ஆண்டனி, மீனா, மீரா ஜாஸ்மின், அம்பிகா, சந்தியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X