80 வயசு வரை விட மாட்டேன்.. அமிதாப்!

அமிதாப் பச்சனுக்கு வருகிற திங்கள்கிழமை 67 வயதாகிறது. இந்த வயதிலும் அவரது கை நிறையப் படங்கள். 3 படங்கள் ரிலீஸுக்குக் காத்துள்ளன. இதுதவிர ஒரு ரியாலிட்டி ஷோவை தொகுத்து அளித்து வருகிறார்.
இப்படி படு பிசியாக இருப்பதால் இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்கிறார் அமிதாப் பச்சன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த விஷயத்தில் அசோக் குமார் போல இருக்க நினைக்கிறேன். அவர் தனது 80வது வயது வரை முக்கியமான ரோல்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். அதேபோல நானும் நடிக்க விரும்புகிறேன் - 80 வயது வரை.
என்னைப் போன்ற வயதுடையவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல்கள் கிடைப்பதில்லை என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். அசோக் குமாருக்கு 80 வயதிலும் கூட அருமையான கேரக்டர்கள் கிடைத்தன. அந்த வயதிலும் அருமையாக நடித்தவர் அசோக் குமார். அவர் ஒரு முன்னுதாரணம்.
இனிமேல் என்னால் மரத்தைச் சுற்றி வந்து காதல் செய்து நடிக்க முடியாது. எனவே இந்த வயதுக்கு எது பொருத்தமாக இருக்குமோ அந்த ரோல்களில் நடிக்க விரும்புகிறேன் என்கிறார் அமிதாப்.


Click it and Unblock the Notifications











