ஏழைகளுக்கு இதய நோய் சிகிச்சை: நிதி திரட்டுகிறார் மம்முட்டி

By Staff

Mammooty and Sneha
மலையாள மெகா ஸ்டாரான மம்முட்டி ஆதரவற்ற ஏழைகளின் இதய நோய் மருத்துவ சிகிச்சைக்காக நிதி திரட்டி வருகிறார்.

வாய்ப்பு இருக்கும்வரை நேரத்தை வீணாக்காமல் பணம், பணம் என்று சம்பாதிக்க அலையாமல் ஆதரவற்ற ஏழைகளுக்காக தங்களை அர்ப்பணிப்பதற்கு நல்ல மனம் வேண்டும்.

மலையாளத் திரையுலகில் கொடிகட்டிப் பறக்கும் மெகா ஸ்டார் மம்முட்டி அப்படியொரு வெள்ளை மனத்தை ஏழைகளுக்காகத் திறந்து காட்டியுள்ளார்.

ஆண்டுதோறும் 100 ஏழைகளுக்கு இதய அறுவை சிகிச்சைக்காக நிதி திரட்டித் தர மம்முட்டி முன்வந்துள்ளார்.

கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள நூருல் இஸ்லாம் மருத்துவ அறிவியல் மையத்தில் இலவசமாக இந்த சிகிச்சைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்குத் தேவையான நிதி திரட்டும் பணியி்ல் தனது ரசிகர் மற்றும் நற்பணி மன்றங்களை ஈடுபடுத்துவதற்கு மம்முட்டி முடிவு செய்துள்ளார். நூருல் இஸ்லாம் மருத்துவமனையுடன் இணைந்து செயல்படுத்தவுள்ள இந்த திட்டத்தின் பிராண்ட் அம்பாசிடராக மம்முட்டி இருப்பார்.

நிதி திரட்டும் பணியை கடந்த சில நாட்களுக்கு முன் கொச்சியில் மம்முட்டி தொடங்கிவைத்தார்.

நூருல் இஸ்லாம் மருத்துவமனையுடன் இணைந்து கண் தானம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம்களை மம்முட்டி ரசிகர்கள் ஏற்கெனவே நடத்தியுள்ளனர்.

இதேபோல் தமிழகத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் தன் நற்பணி மன்றங்கள் மூலம், சென்னை மெடிக்கல் மிஷன் மற்றும் அகில உலக மலையாளிகள் சங்கம் இணைந்து இந்த ஆண்டுக்குள் 125 பேருக்கு இதய அறுவை சிகிச்சையளிக்கும் திட்டத்துக்கு ஆதரவாக நிதி திரட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X