twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    25 ஐ முடித்து விட்டு 31க்குள் நுழைந்த தனுஷ்!

    By Mayura Akilan
    |

    தனுஷ்.... இன்று 31 வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில் 25 திரைப்படங்களை நடித்து முடித்திருக்கிறார்.

    2002ம் ஆண்டு பள்ளிப் பருவத்தில் துள்ளுவதோ இளமையில் தொடங்கியது தனுசின் திரையுலகப் பயணம்.

    2014ல் 25வது திரைப்படமான வேலையில்லா பட்டதாரி படத்தின் வசூல் வேட்டையோடு தனது 31 வது பிறந்தநாளை தனது நண்பர்களுடனும், உறவினர்களுடனும் வெற்றிவிழாவாகக் கொண்டாடி வருகிறார்.

    25 திரைப்படங்களில் தேசிய விருது பெற்றுத்தந்த ஆடுகளம் திரைப்படமும் உள்ளது. சில தோல்விப்படங்களும் உள்ளன. இதில் தனுஷ் நடித்திருக்க வேண்டாமோ என்று அவருடைய ரசிகர்கள் எண்ணிய படங்களும் உள்ளன.

    இன்றைக்கு நாம் தனுஷ் நடித்துள்ள திரைப்படங்களில் டாப் டென் திரைப்படங்களை பட்டியலிட்டு தனுசுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வோம்.

    தனுஷ் பள்ளி மாணவன்

    தனுஷ் பள்ளி மாணவன்

    துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் பள்ளி மாணவனாக நடித்த தனுஷ், காதல் கொண்டேன், 3, ராஞ்சனா ஆகிய படங்களில் மாணவனாகவே நடித்தார்.

    திருடா திருடி

    திருடா திருடி

    துறு துறு இளைஞனாக தனுஷ் நடித்த படம் திருடா திருடி. பக்கத்து வீட்டு இளைஞன் போன்ற தோற்றம் பல ரசிகர்களைப் பெற்றுத்தந்தது. இந்தப் படத்தில் வரும் மன்மதராசா படலுக்கு தனுஷ் போட்ட ஆட்டம் இன்றைக்கும் பலரையும் ஆடவைக்கிறது.

    பாலுமகேந்திரா இயக்கத்தில்

    பாலுமகேந்திரா இயக்கத்தில்

    அது ஒரு கனாக்காலம் திரைப்படத்தில் பாலுமகேந்திராவால் பட்டைத் தீட்டப்பட்ட தனுஷ் தன்னுடைய புதுவிதமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

    திருவிளையாடல் ஆரம்பம்’

    திருவிளையாடல் ஆரம்பம்’

    அரசியல் ரவுடியாக தனுஷ் நடித்த படம் புதுப்பேட்டை. இது பெரும்பாலான சினிமா ரசிகர்களைக் கவரவில்லை. சில தோல்விகளுக்குப் பின்னர் தனுஷ் கொடுத்த வெற்றிப்படம்தான் திருவிளையாடல் ஆரம்பம்.

    பொல்லாதவன்

    பொல்லாதவன்

    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த இந்தத்திரைப்படம் அநேக ரசிகர்களைக் கவர்ந்தது. தான் நேசித்த மோட்டர்பைக் திருடு போன உடன் ஏற்பட்ட தவிப்பை, தேடலை அழகாக வெளிப்படுத்தியிருப்பார் தனுஷ்.

    யாரடி நீ மோகினி

    யாரடி நீ மோகினி

    ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளைஞனாக தனுஷ் அசத்தியிருப்பார். நயன்தாரா உடனான ரொமான்ஸ் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

    2011ல் தனுஷ்

    2011ல் தனுஷ்

    2010ம் ஆண்டுவரை ஆண்டுக்கு ஒரு படம், இரண்டு படம் மட்டுமே நடித்து வந்த தனுஷ், 2011ம் ஆண்டில் ‘ஆடுகளம்', ‘சீடன்', ‘மாப்பிள்ளை,' ‘வேங்கை', ‘மயக்கம் என்ன' ஆகிய 5 படங்களில் நடித்தார்.

    தேசிய விருது

    தேசிய விருது

    இதில் ஆடுகளம் திரைப்படத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசியவிருது பெற்றார் தனுஷ்.

    பாலிவுட்டில் தனுஷ்

    பாலிவுட்டில் தனுஷ்

    ஆடுகளம் படத்தின் வெற்றி பாலிவுட் வரை தாக்கியது. அது ராஞ்சனா படவாய்ப்பினை பெற்றுத்தந்தது. இந்தியிலும் தனுஷை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர்.

    வேலையில்லா பட்டதாரி

    வேலையில்லா பட்டதாரி

    தனுஷ் நடித்த 3, மரியான், நையாண்டி, திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக இல்லாவிட்டாலும் தனுஷ் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. சமீபத்தில் வெளியான வேலையில்லா பட்டதாரி தனுசின் 25வது திரைப்படம். இது வெற்றி பெற்றதோடு வசூலில் சாதனை படைத்துள்ளது.

    English summary
    Of a career spanning 25 movies, we have taken out the 10 most defining moments of magic that either made Dhanush noticeable as an actor or gave him the mass appeal.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X