தீபாவளிக்கு நான் கடவுள்?

படம் ஒருவழியாக முடிந்து விட்டதென்றாலும் எப்போது வெளியாகும் என்று சொல்ல முடியவில்லை.
படத்தின் தாரிப்பாளர் பிரமிட் சாய்மிரா நிறுவனமோ அல்லது இயக்குநர் பாலாவோ எந்தத் தகவலும் சொல்ல மறுக்கிறார்கள். ஆனால் படத்தின் நாயகன் ஆர்யாவுக்கு அபார நம்பிக்கை.
நிச்சயம் இந்தப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிவிடும் என்கிறார் உறுதியுடன்.
நான் கடவுள் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. தமிழ் சினிமாவுக்கு நிஜமான சர்வதேச அங்கீகாரம் பெற்றுத் தரக்கூடிய அளவுக்குத் தரமான படம் இது.
எல்லா வேலைகளும் முடிந்து ரிலீசுக்குத் தயாராக உள்ளது. தீபாவளிக்கு கண்டிப்பாக ரிலீசாகிவிடும், என்கிறார் ஆர்யா.
இப்போது சர்வம் படத்தில் நடிக்கும் ஆர்யாவுடன் முதல் முறையாக ஜோடி சேர்கிறார் த்ரிஷா. அதிரடி ஆக்ஷன் கதையாக உருவாகும் இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸாம்.
சும்மா சொல்லக் கூடாது, யாருய்யா இது என்று அத்தனை பேரும் ஆச்சரியப்பட்டுக் கேட்கும் வகையில், ஆர்யா கலக்கலாக நடித்துள்ளாராம் இப்படத்தில்,.
அப்ப, இந்த ஆண்டு பண்டிகை நாயகன் ஆர்யாதானா!


Click it and Unblock the Notifications











