மீண்டும் மலையாளத்தில் நரேன்

மலையாளத்தில் வளரத் தொடங்கிய நரேன், தமிழில் சித்திரம் பேசுதடி மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் கொடுத்த பெரிய பிரேக்கைத் தொடர்ந்து தமிழிலேயே செட்டிலாகி விட்டார்.
இதனால் மலையாளத்துக்கு திரும்பாமல் இருந்து வந்தார். அஞ்சாதே படம் அவருக்கு பெரிய பிரேக் தந்தது. இடையில் பூக்கடை ரவி என்ற படத்தில் ஒப்பந்தமானார்.
இடையில் மலையாளத் திரையுலகினர் நரேனுக்கு தடை விதித்து விட்டனர். இதனால் சுத்தமாக மலையாள படம் பக்கமே திரும்பாமல் இருந்து வந்தார் நரேன்.
இந்த நிலையில் சத்யன் அந்திக்காடு படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வந்துள்ளது. பெயரிடப்படாத அப்படத்தில் ஜெயராம், கனிகா ஆகியோர் ஜோடி சேர்ந்துள்ளனர். நரேன் படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
கேரளாவின் அழகிய குட்டநாடு பகுதியில் படப்பிடிப்பு நடக்கிறது.
Comments
கனிகா சத்யன் அந்திக்காடு சினிமா ஜெயராம் தமிழ் நரேன் பூக்கடை ரவி மலையாளம் cinema jayaram kaniha naren pookadai ravi sathyan anthikad


Click it and Unblock the Notifications