ஆர்யா குறித்த மோசமான வதந்தி... நம்ப வேண்டாமென வேண்டுகோள்!
நடிகர் ஆர்யா குறித்து படுமோசமான வதந்தி ஒன்று இன்று காலையிலிருந்து எஸ்எம்எஸ் மூலம் பரவிக்கொண்டுள்ளது.
சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் ஆர்யா சிக்கிக் கொண்டு உயிரிழந்ததாக அந்த எஸ்எம்எஸ் தெரிவிக்கிறது.
ஆனால் இந்த எஸ்எம்எஸ் முற்றிலும் தவறான, பொய்யான வதந்தி என்று தெரியவந்துள்ளது.
ஆர்யாவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் அவர் நலமாக, பாலாவின் அவன் இவன் படப்பிடிப்பில் உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது.
ரசிகர்கள் இந்த தவறான எஸ்எம்எஸ்ஸை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications