விஜய்யின் 50வது படம்-இயக்கும் சித்திக்!

பிரபு தேவா இயக்கத்தில் அய்ங்கரன் நிறுவனத்துக்காக வில்லு படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து ஏவி.எம் பாலசுப்பிரமணியம் தயாரிக்கும் வேட்டைக்காரன் படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக அசின் நடிக்க பேச்சு நடந்து வருகிறது.
இதையடுத்து அவர் நடிப்பது, அவரது கேரியரில் முக்கிய படமாகப் பார்க்கப்படுகிறது.
காரணம் விஜய்க்கு இது 50 வது படம். இந்தப் படத்தை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தை இயக்குவோர் பட்டியலில் பிரபுதேவா, பேரரசு உள்பட பல்வேறு இயக்குனர்கள் பரிசீலனையில் இருந்தனர். இப்போது மலையாள இயக்குனர் சித்திக் இயக்குவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
காமெடியுடன் கூடிய ஆக்ஷன் படமாக இது இருக்கும். ப்ரண்ட்ஸ் மாதிரி சகல அம்சங்களும் நிறைந்த படமாக இது அமையும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











