ஸ்லம்டாக் மில்லியனரை விமர்சிப்பது தேவையற்றது - ஷாருக்

By Staff

Shahrukh Khan
ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படம் ஏழை மக்களின் வாழ்க்கை அப்படியே வெளிகாட்டியுள்ளது. இதை விமர்சிப்பது தேவையற்றது என்கிறார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான்.

இங்கிலாந்து இயக்குனர் டேனி பாயில் இயக்கி வெளி வந்து சர்வதேச விருதுகளை அள்ளி குவித்து வரும் படம் ஸ்லம்டாக் மில்லியனர். இப்படத்துக்கு இசையமைத்த ஏஆர் ரகுமான் கோல்டன் குளோப், பாஃப்டா என பல விருதுகளை பெற்றார். இவருக்கு ஆஸ்கார் விருதும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் துவக்கத்திலிருந்தே விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆரம்பத்தில் படத்தின் பெயரில் டாக் என்ற வார்த்தை இருக்கிறது. இது சேரியில் வசிக்கும் இந்தியர்களை அவமதிப்பதாக கூறப்பட்டது. பின்னர் இப்படம் இந்தியாவின் நிலைமையை சர்வதேச அளவில் குறைக்கும் விதமாக எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது,

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் இப்படத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இன்னொரு சூப்பர் ஸ்டாரான ஷாருக் கான் ஸ்லம்டாக் படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

இப்படம் அருமையாக இருக்கிறது. இப்படம் ஏழை மக்களின் வாழ்க்கை அப்படியே வெளிகாட்டியுள்ளது. இதை விமர்சிப்பது தேவையற்றது. சிலர் இது இந்தியாவை இழிவுபடுத்தும் வகையில் அமைத்திருப்பதாக கூறுகின்றனர்.

அப்படியென்றால் வெளியில் இருந்து ஒருவர் வந்து காந்தி, ஸ்லம்டாக் மில்லியனர் போன்ற படங்களை ஏன் எடுக்க வேண்டும். அது ஏன் உலக அளவில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, வெற்றிகரமாக ஓட வேண்டும். நாம் மட்டும் தான் இப்படம் இந்தியாவை இழிவாக சித்திரிப்பதாக கூறி வருகிறோம் என்கிறார் ஷாருக்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X