ஆந்திர வெள்ளம்-தமிழ் நடிகர்கள் ரூ.20 லட்சம் உதவி!

ஆந்திர மாநிலத்தில் மழை-வெள்ளத்தால் 5 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு உதவும் வகையில், ஆந்திர மாநில திரைப்பட நடிகர்கள் சங்கம் சார்பில், ஹைதராபாத்தில் நட்சத்திர கலைநிகழ்ச்சி நடந்தது.
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, செயற்குழு உறுப்பினர் சூர்யா ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
ரஜினிகாந்த் கட்டாயம் இந்த விழாவில் பங்கேற்கிறார் என்று ஹைலைட் செய்து டிக்கெட்டுகளை விற்றிருந்தனர் தெலுங்கு திரையுலகினர். அதிகபட்சமாக ஒரு டிக்கெட் விலை ரூ.1 லட்சம் வரை விற்கப்பட்டது.
ஆந்திர மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நடிகர் சங்க அறக்கட்டளை சார்பில் ரூ.5 லட்சம், சூர்யா ரூ.10 லட்சம், விஷால் ரூ.2.50 லட்சம், விஜய் ரூ.2 லட்சம், ஜெயம் ரவி ரூ.1 லட்சமும் தங்கள் பங்களிப்பாகத் தந்தனர்.
அனைத்தையும் சேர்த்து மொத்தம் ரூ.20 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலையை விழாக்குழு தலைவர் நடிகர் பாலகிருஷ்ணாவிடம், ராதாரவி வழங்கினார்.


Click it and Unblock the Notifications











