எங்க வீட்டுப் பிள்ளை... விஜயகாந்தின் அடங்காத ஆசை!

இதோ அவர் பங்குக்கு ஒரு எம்ஜிஆர் படத்தை உல்டா பண்ணும் வேலையில் இறங்கியிருக்கிறார். தனது இயக்கத்தில் உருவாகும் விருதகிரி முடிந்ததும் இந்தப் படத்தைச் செய்ய விரும்புகிறாராம்.
இந்தப் படத்தின் கதைக் கரு, புரட்சித் தலைவர் அமரர் எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளைதான். ஆனால் கேப்டனின் போதாத காலம், எங்க வீட்டுப் பிள்ளை படத்தை அதே பெயரில் ரீமேக் பண்ணுகிறார்கள் அதன் ஒரிஜினல் தயாரிப்பாளர்களான விஜயா கம்பைன்ஸ்.
ஆனாலும் எங்க வீட்டுப் பிள்ளை படத்தை கிட்டத்தட்ட 75 தடவைக்கு மேல் பார்த்து சாதனை புரிந்த விஜய்காந்துக்கு, எம்ஜிஆர் நடித்த அந்த இரட்டை வேடங்களில் நடிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்ததாம்.
எனவே கிட்டத்தட்ட எங்க வீட்டுப் பிள்ளை கதையின் சாயலில் ஒரு ஸ்கிரிப்டை தயார் பண்ணச் சொல்லி விஜய்காந்த் கூறியதால், அதேபோல ஆக்ஷன், காமெடியுன் ஒரு கதையை தயார் செய்துள்ளார்களாம், விஜய்காந்த் கதை இலாகாவினர்.
படத்துக்குப் பெயர்? உங்க வீட்டுப் பிள்ளை!!
எப்பூடி!!


Click it and Unblock the Notifications











