விக்ரமுடன் இணையும் 'பொம்மரிலு'!

பாஸ்கர் தெலுங்கில் பிரபல இயக்குநராக இருந்தாலும் பிறப்பால் தமிழர். அவரது பொம்மரிலு அங்கு பெரும் ஓட்டம் ஓடியது. வசூல் சாதனை படைத்த படம்.
இப்போது பாஸ்கரும், சீயான் விக்ரமும் கை கோர்க்கிறார்கள். விக்ரமுக்கு தெலுங்கு புதிலில்லை. தமிழில் ஸ்டார் ஆகும் முன்பு அவர் மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில்தான் நடித்துக் கொண்டிருந்தார்.
இப்போது பக்கா தமிழ் நடிகராகி விட்டதால், தெலுங்குப் பக்கம் விக்ரம் போய் ரொம்ப நாட்களாகி விட்டது. இந்த நிலையில் பாஸ்கரின் படம் விக்ரமைத் தேடி வந்துள்ளது.
பாஸ்கர் கூறிய கதை விக்ரமுக்கு சட்டென பிடித்துப் போகவே செய்யலாம் என்று கூறி விட்டாராம்.
தற்போது பாஸ்கர் அல்லு அரவிந்த்தை வைத்து பருகு என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அதை முடித்து விட்டு விக்ரமுடன் இணையவுள்ளாராம்.
விக்ரமை வைத்து இயக்கவுள்ள படத்தை தமிழிலும் டப் செய்யும் திட்டம் பாஸ்கரிடம் உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











