சூப்பர் ஹிட் 'மோகினி'!

By Staff

Dhanush with Nayanatara
அஞ்தசாதே படத்துக்குப் பின்னர் இந்த ஆண்டின் இரண்டாவது சூப்பர் ஹிட் படம் என்ற பெயரை தனுஷ், நயனதாரா நடித்துள்ள யாரடி நீ மோகினி பெற்றுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை வெளியாகியுள்ள படங்களில் சூப்பர் ஹிட் என்ற அந்தஸ்து அஞ்சாதே படத்திற்கு மட்டுமே கிடைத்துள்ளது. இந்த நிலையில் தனுஷ், நயனதாராவின் நடிப்பில் வெளியாகியுள்ள யாரடி நீ மோகினியும், இந்த வரிசையில் இணைந்துள்ளது.

படத்திற்கு தமிழகம் முழுவதும் செமத்தியான வரவேற்பு கிடைத்துள்ளதாம். அரங்கு நிறைந்த காட்சிகளாக ரசிகர்களை மயக்கி வருகிறதாம் மோகினி.

சென்னை மற்றும் பிற பகுதிகளில் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் படத்திற்கு கூட்டம் ஏகமாக அலைமோதியுள்ளது. குறிப்பாக பெண்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு எகிறுகிறதாம்.

தனுஷ், நயனதாராவின் நடிப்புக்கு பெண்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்திருப்பது இருவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

மேலும், ரகுவரன் கடைசியாக நடித்த படம் என்ற பெருமையும் இப்படத்திற்குக் கிடைத்திருக்கிறது. இப்படத்தில் தனுஷின் தந்தையாக ரகுவரன் நடித்திருந்தார். ரகுவரனின் நடிப்பை ரசிகர்கள் கண்களில் நீர் துளிக்க ரசித்துப் பாராட்டுகின்றனர். இதுவும் படத்துக்கு கிடைத்துள்ள வெற்றிக்கு முக்கிய காரணம்.

யுவன் ஷங்கர் ராஜாவின் அசத்தல் இசையும் படத்துக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. பாடல்களுக்கு தியேட்டர்களில் கரகோஷமும், விசிலோசையும் ஏகமாக கிடைத்துள்ளது. பாடல் காட்சிகள் வரும்போது தம் அடிக்கப் போவோரை விரல் விட்டு எண்ணி விடலாமாம்.

அஞ்சாதே படத்திற்குப் பிறகு யாரடி நீ மோகினி படத்திற்கு கிடைத்துள்ள இந்த அபரிமிதமான வரவேற்பு விநியோகஸ்தர்களையும் குஷியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை 35 படங்கள் வெளியாகியுள்ளது. அதில் இரண்டு மட்டுமே சூப்பர் ஹிட் என்பது சற்றே சங்கடமான செய்திதான் - திரைத்துறையினருக்கு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X