அஜீத்தை வைத்து ரீமேக்-அமீர் ஆசை

அந்தப் படம் சிவாஜி கணேசன் நடித்த பலே பாண்டியா.
அதுவும் அஜீத்குமாரை வைத்து ரீமேக் செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறாராம் அமீர். சமீபத்தில் ஒரு விழாவில் அமீரே சொன்ன தகவல் இது.
அமீர் பேசுகையில், நான் அஜீத்தின் நட்சத்திர அந்தஸ்துக்காக இதைச் சொல்லவில்லை. அவரது உடல் தோற்றத்துக்கு மிகப் பொருத்தமான வேடம் இது. குறிப்பாக காமெடி ரோல்களில் ரஜினி மாதிரி அருமையாக நடிக்கும் திறமை அஜீத்துக்கு உண்டு. அதற்கு அவரது வில்லன் திரைப்படமே சான்று, என வெளிப்படையாகப் பேச, இதைக் கேள்விப்பட்ட அஜீத்தும் ஆர்வமாக விசாரித்துள்ளாராம்.
நமக்குக் கிடைத்த தகவல்களின் படி, இப்படி ஒரு படம் செய்தால் என்ன என்ற யோசனையுடன் அமீரிடம் அஜீத்தும் அவர் மேனேஜரும் பேசியதாகத் தெரிகிறது.
இந்தப் படத்தையும் நாங்களே தயாரிக்கிறோம் என தாங்களாகவே முன் வந்துள்ளனராம் அய்ங்கரன் நிறுவனத்தினர்.
கருப்பு வெள்ளையில் நடிகர் திலகம் படைத்த சாதனையை அஜீத் கலர் புல்லாக நிகழ்த்தப்போகிறார்!


Click it and Unblock the Notifications











