பாலா படத்தில் 'ஜித்தன்'?

By Staff

Ramesh with Mallika Kapoor
நடிகர் ஜீவாவின் அண்ணன் ஜித்தன் புகழ் ரமேஷை அழைத்து இயக்குநர் பாலா பேசியுள்ளார். இதனால் பாலா படத்தில் ரமேஷ் நடிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜீவா நடிக்க வந்து வெகு காலத்திற்குப் பின்னர் நடிகரானவர் ரமேஷ். இருந்தாலும் இதுவரை அவருக்கு பெரும் பிரேக் கிடைக்கவில்லை.

ஜித்தன், மதுரை வீரன், நீ வேனுண்டா செல்லம் என சில படங்களில் அவர் நடித்துள்ளார். இந்த நிலையில், பிள்ளையார் தெரு கடைசி வீடு என்ற புதிய படத்தில் கிட்டத்தட்ட 2 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் நடிக்க வந்துள்ளார் ரமேஷ்.

இதற்கிடையே, இயக்குநர் பாலா, ரமேஷை அழைத்துப் பேசியுள்ளாராம். தனது அடுத்த படத்தில் ரமேஷை நடிக்க வைக்க பாலா யோசித்து வருவதாக தெரிகிறது. இதனால் ரமேஷ் பெரும் உற்சாகம் அடைந்துள்ளார்.

பாலா படத்தில் நடித்தவர்கள் அத்தனை பேரும் உச்சத்திற்குப் போயுள்ளனர் என்பது வரலாறு. எனவே தனக்கும் நிச்சயம் மிகப் பெரிய பிரேக் கிடைக்கும் என்று நம்புகிறார் ரமேஷ்.

பாலாவின் சிஷ்யரான அமீர் இயக்கிய ராம் படத்திற்குப் பிறகுதான் ஜீவா பெரும் உச்சத்திற்குப் போனார் என்பதால் பாலாவின் நடிப்பு அழைப்புக்காக காத்திருக்கிறாராம் ரமேஷ்.

அவருக்கு இன்னொரு ஆசையும் உண்டாம். அது தனது தம்பி ஜீவாவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது. கூடிய விரைவில் அதுவும் நிறைவேறும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ரமேஷ்.

'சித்தனை' உயர்த்திய பாலா, 'ஜித்தனை'யும் உயர்த்தாமல் போய் விடுவாரா என்ன?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X