விஜயகாந்த்தின் எங்கள் ஆசானை வெளியிட தடை

விஜயகாந்த் கதாநாயகனாகவும், ஷெரில் பிரின்டோ கதாநாயகியாகவும் நடித்து, கலைமணி டைரக்டு செய்த படம், எங்கள் ஆசான். இந்த படத்தை தங்கராஜ் என்பவர் தயாரித்துள்ளார்.
இந்த படம், பொங்கலுக்கு திரைக்கு வர இருந்தது. வெளியாகும் தியேட்டர்கள் குறித்த விளம்பரங்கள் தொடர்ந்து வெளியாகின.
இடைக்கால தடை
இந்த நிலையில், செவன்த்சேனல் மாணிக்கம் நாராயணன் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், தங்கராஜ் எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை இதுவரை கொடுக்கவில்லை. எனவே அவர் தயாரித்துள்ள எங்கள் ஆசான் படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
ஐகோர்ட்டு இந்த மனுவை விசாரித்து, எங்கள் ஆசான் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது.
கஜேந்திராவுக்குப் பிறகு விஜய்காந்தின் படங்கள் தொடர்ந்து வழக்குகளில் சிக்கி தாமதமாவது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications