டைரக்டர் ஆகிறார் தனுஷ்

தனுஷும், சிம்புவும் நண்பர்கள். தனுஷ் நடிக்க வந்தது முதல் இன்னும் நடித்துக் கொண்டு மட்டுமே இருக்கிறார். ஆனால் சிம்புவோ பாடுகிறார், டைரக்ஷனிலும் கலக்கியுள்ளார்.
இந்த நிலையில் தனுஷும், சிம்பு வழியில் இயக்குநராகிறார். அடுத்த ஆண்டுதான் இந்தப் படத்தை இயக்கப் போகிறாராம். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாகவே இதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்.
தனது இயக்குநர் அவதாரம் குறித்து தனுஷ் கூறுகையில், கதை ரெடி, பீரியட் படமாக இருக்கும். ஹீரோவும் கூட ரெடி. அது நான் இல்லை. ஒரு நடிகரை நினைத்துள்ளேன்.
அந்த நடிகரிடம் நான் எதிர்பார்ப்பது போன்ற நடிப்பு வந்தால் அவர் நடிப்பார். இல்லாவிட்டால் நானே ஹீரோவாக நடித்து விடுவேன்.
நான்கு வருடமாகவே இதற்காக உழைத்து வருகிறேன். எனவே நான் திடீர் டைரக்டர் இல்லை. தயாரிப்பாளருக்கு என்னால் பாதிப்பு வர விட மாட்டேன் என்றார் தனுஷ்.
அப்பா, அண்ணா வழியில் தனுஷும் கலக்கட்டும்.


Click it and Unblock the Notifications











