வன்கொடுமை சட்டத்தில் கைது... புழல் சிறையில் அடைக்கப்பட்டார் நடிகர் சிவா!

ஈரமான ரோஜாவே, அர்ச்சனா ஐ.ஏ.எஸ் போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் சிவா (வயது 43). இவர் தற்போது டி.வி தொடர்களில் நடித்து வருகிறார்.
இவரது மனைவி பெயர் மீனாட்சி (37). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சிவா சாலிகிராமம் பங்கஜம் கார்டனில் வசித்து வருகிறார்.
குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி தினமும் அடித்து துன்புறுத்தி, சித்ரவதை செய்வதாக சிவா மீது, அவரது மனைவி மீனாட்சி சென்னை வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
உதவி கமிஷனர் மாடசாமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடிகர் சிவா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
நேற்று இரவு சிவாவை போலீசார் விசாரணைக்கு அழைத்த வந்த போதும், போலீஸ் நிலையத்தில் அவர் ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையொட்டி அவரை போலீசார் கைது செய்தனர்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் சிவா.


Click it and Unblock the Notifications











