கல்பாத்தி அகோரத்துடன் கைகோர்க்கும் கார்த்தி!

தமிழில் இன்றைய தேதிக்கு அதிக படங்களைத் தயாரித்து வரும் நிறுவனம் ஏஜிஎஸ். திருட்டுப் பயலே தொடங்கி அவன் இவன் வரை இந்த நிறுவனத்தின் வெற்றிப்பட எண்ணிக்கையும் அதிகம்.
இந்த நிறுவனம் இப்போது இளம் நடிகர்களில் முன்னணியில் உள்ள கார்த்தியுடன் இணைகிறது. தற்போது கைவசம் உள்ள சகுனியை முடித்ததும் இந்த படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கித் தந்துள்ளார் கார்த்தி.
இந்தப் படத்துக்கான இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் படங்களில் நடிப்பதற்கு முன்னோட்டமாக அந்த நிறுவனத்தின் படவிழாக்களில் பங்கேற்று வருகிறார் கார்த்தி.


Click it and Unblock the Notifications











