குஷி மற்றும் ரிஷா.. மீண்டும் முரளி!

By Staff

Nee Unnai Arinthaal
மகன் ஹீரோவாக நடிக்க வந்தாலும், இன்னும் இளமை மாறாமல் இருப்பவர் 'முன்னாள் கல்லூரி மாணவர்' முரளி!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவர் நாயகனாக நடிக்கும் படம் நீ உன்னை அறிந்தால்.

24 பிரேம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் இரு நண்பர்களின் உறவையும், பிரிவையும் சொல்லும் குடும்பப் படம். இந்தியன் பாஸ்கர் - வி ரிஷிராஜ் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்கள்.

புதுமுகம் குஷி மற்றும் ரிஷா நாயகிகளாக நடிக்கிறார்கள்.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை விஜய் பார்க் ஒட்டலில் நடந்தது. பாடல்களை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் வெளியிட, சிவசக்தி பாண்டியன் பெற்றுக் கொண்டார்.

சென்னை - செங்கை மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஷாம், நரேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்கே சுந்தர் இசையமைக்கும் இந்தப் படத்தின் பாடல்களை, இயக்குநர்களில் ஒருவரான இந்தியன் பாஸ்கரே எழுதியுள்ளார். இஸட் டி சௌத்ரி தயாரித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X