'ஷட் அப் ஷாரூக்...!'

பிலிம்பேர் விருது வழங்கும் விழா...இதில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் கிங் கான் ஷாரூக் கான் மற்றும் சாயிப் அலிகான் பங்கேற்றனர். இவர்களுடன் பிபாஷா பாசு மற்றும் கத்ரினா கைஃபும் கலந்து கொண்ட நிகழ்ச்சி அது.
நீல் நிதின் முகேஷ் என்ற வளரும் நடிகரும் இதில் கலந்து கொண்டார். இவர் வேறு யாருமல்ல, மறைந்த பிரபல இந்திப் பாடகர் முகேஷின் பேரன். இவர் தந்தை நிதின் முகேஷும் பிரபல பாடகர்தான்
மேடையில் நீலின் பெயரைச் சொல்லி தொடர்ந்து சீண்டிக் கொண்டே இருந்தார் ஷாரூக்கான். ஏன் உங்களுக்கு குடும்பப் பெயர் இல்லை என்று அவர் கேட்க, கோபமடைந்த நீல், 'ஷட் அப் ஷாரூக்' என்று கத்த, அரங்கமே ஒரு நிமிடம் திகைத்துப் போனது.
நீலின் தந்தை நிதின் முகேஷும் அதிர்ந்து போனார். உடனடியாக ஷாரூக்கிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னார் பிபாஷா பாசு.
ஆனால் இது அத்தனையும் நிஜமல்ல... அன்றைய ஷோவின் ஒரு பகுதிதான் என்று பின்னர் தெரிவித்தனர். எல்லாம் ஷாரூக்கான் திட்டமாம். நீலை வெறுப்பேற்றுவது, அதில் அவர் கோபப்பட்டு திட்டி முட்டையை எடுத்து ஷாரூக் மேல் எறிவது என்பது ஷாரூக் ஷோவின் திட்டமாம். இதை நீலிடம் சொன்னபோது, அவர் பயந்து விட்டாராம். வேண்டுமானால் முட்டையை எறியாமல், எடுத்து வந்து தலைமீது உடைத்து விடுகிறேன். அது கொஞ்சம் மைல்டாக தெரியும் என்று திட்டத்தை மாற்றித் தரும்படி கோரினாராம் நீல்.
மேடைக்குப் பின் நடந்த இந்த செட்டப் தெரியாமல், நீல் மேல் ஆத்திரப்பட்டார்களாம் விழாவுக்கு வந்திருந்தவர்கள். பின்னர் அவர்களுக்கு உண்மையை விளக்கினர் விழா ஏற்பாட்டாளர்கள்.


Click it and Unblock the Notifications











