மறுபடியும் விவேக் ஹீரோ!

சொல்லி அடிப்பேன். இதுதான் விவேக் ஹீரோவாக நடித்த முதல் படம். முதல் படத்திலேயே இவருக்கு இரண்டு ஹீரோயின்கள். ஆனால் படம்தான் இன்னும் வெளி வரக் காணோம். எப்போது படம் வரும் என்பது விவேக் உள்பட யாருக்குமே தெரியவில்லை.
இந்த நிலையில் விவேக் இன்னும் ஒரு ஹீரோ படத்தில் நடிக்கப் போகிறார். இதில் விவேக் ஹீரோ என்று அதிகாரப்பூர்வமாக சொல்லப்படவில்லை என்றாலும் கூட விவேக்தான் கதையின் நாயகனாம்.
டி.பி.கஜேந்திரன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கவுள்ளார். படத்திற்கு மகனே, மருமகனே என பெயரிட்டுள்ளனர்.
படத்தில் மிருதுளா, லக்ஷனா என இரு நாயகிகள். கூட ருக்சனாவும் இருக்கிறார். இவர்கள் போக நாசர், லிவிங்ஸ்டன், சரண்யா, பரவை முனியம்மா உள்ளிட்டோரும் படத்தில் உள்ளனர். தினா இசையமைக்கிறார்.
ஜனரஞ்சக படமான இதில் விவேக் வித்தியாசமான வேடத்தில் வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











