வர்ராருய்யா ராம்கி!

By Staff

Ramki with Nirosha
ஒரு காலத்தில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருந்த ராம்கி பெரிய இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் சினிமாவுக்கு வருகிறார். தயவு செய்து அரள வேண்டாம் - நடிகராக அல்ல, இயக்குநராக.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய பெரும் இமயங்களுக்கு அடுத்த தலைமுறை நடிகர்கள் உருவாக ஆரம்பித்த நேரத்தில் சின்னப் பூவே மெல்லப் பேசு படம் மூலம் ஹீரோவாக வந்தவர் ராம்கி. அதன் பின்னர் ஏகப்பட்ட படங்களில் நடித்தார்.

பெரிய ஹீரோவாகாவிட்டாலும் கூட பிசியான ஹீரோவாகவே இருந்தவர் ராம்கி. காலப் போக்கில் ஏகப்பட்ட இளம் ஹீரோக்கள் குவியத் தொடங்கியதால் ராம்கிக்கு வாய்ப்புகள் குறைந்தன.

பிசியாக இருந்த காலத்திலேயே நிரோஷாவைக் காதலித்து சத்தம் போடாமல் மணந்து குடும்பம் நடத்தத் தொடங்கினார் ராம்கி. ஊரறிய அறிவித்து, உலகறிய பிரமாண்டமாக கல்யாணம் செய்து கொண்ட நட்சத்திர தம்பதிகள் சட்டென்று பிரிந்து போவது பேஷனாக உள்ள இந்தக் காலத்தில், படு சமர்த்தாக, சந்தோஷமாக குடும்பம் நடத்தி வரும் ராம்கி-நிரோஷாவை பாராட்டாமல் இருக்க முடியாது.

சமீப காலமாக ராம்கியை எங்குமே பார்க்க முடிவதில்லை. இந்த நிலையில் மறுபடியும் வருகிறார் ராம்கி. இந்த முறை இயக்குநர் அவதாரம் எடுக்கிறார்.

தனது இயக்குநர் இன்னிங்ஸை இனிமையாகவும், அதிரடியாகவும் ஆரம்பிக்கும் வகையில் அட்டகாசமான கதை ஒன்றை ரெடி செய்து வைத்துள்ளாராம் ராம்கி. விரைவில் தனது முதல் படம் குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளாராம். இந்தக் கதை இதுவரை யாரும் சொல்லாத கதை என்கிறார் நம்பிக்கையுடன் ராம்கி.

கலக்குங்குஜி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X