பில்லா கெட்டப்பில் சிம்பு!

ஆனால் இவர் காப்பியடிக்க முயல்வது ஒரிஜினல் பில்லாவை அல்ல. அஜீத்தின் ரீமேக் பில்லாவை!.
அந்தப் படத்தில் கருப்புக் கண்ணாடி அணிந்தபடி அஜீத் ஸ்டைலாக நடந்து கொண்டே இருப்பார் அல்லவா...(!) அதே போன்ற கெட்டப்பில் இப்போது சிம்புவும் நடிக்கிறார் தனது சிலம்பாட்டம் படத்துக்காக.
படத்தின் ஒரு காட்சியில் சிம்புவும், கருப்புக் கண்ணாடி, கோட் சகிதம் மைநேம் ஈஸ் பில்லா... என ஆடிப் பாடாத குறையாகத் தோன்றுகிறாராம்.
பொல்லாதவன் படத்தில் தனுஷூக்கு வில்லனாக நடித்த கிஷோர்தான் இதில் சிம்பிவுக்கும் வில்லனாக நடிக்கிறார்.
பில்லா கெட்-அப் மீது மிகுந்த ஈடுபாடு இருந்ததால் சிம்புவால் எளிதாக அந்த தோற்றத்துக்கு மாற முடிந்ததாம்.
இதுபற்றி சமீபத்தில் சிம்பு கூறியதாவது: நான் அஜீத்தின் ரசிகன். ஏற்கெனவே என் படத்தில் கூட அதைச் சொல்லியிருக்கிறேன். எனவே அவர் நடித்த பில்லா கெட்-அப் பில் நடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. இதை அஜீத் ரசிகர்களும் கூட விரும்புவார்கள், என்றார்.
இந்த ரீமேக்குகளின் நிஜ பின்னணியே அதுதானே!


Click it and Unblock the Notifications











