மோசமானவங்கள்ளேயே முக்கியமானவங்கே...!

அந்த வரிசையில் தற்போது நடிகரும், டான்ஸ் டைரக்டருமான ஹரிக்குமாரும் இணைந்துள்ளார். அவர் நடித்த மதுரை சம்பவம் செம ஹிட். அவருக்காக மட்டுமல்லாமல், அதில் இடம் பெற்ற சில வசனங்களால்.
ஹரிக்குமார் அந்தப் படத்தில் பேசும் நாங்க மோசமானவங்கள்ளேயே முக்கியமானவங்கே தெரியும்ல என்ற வசனம் ரொம்ப பாப்புலர். ஆனால் இந்த வசனம் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே 'மதுரைக்காரங்கே' மத்தியில் ரொம்ப காலத்திற்கு முன்பே பாப்புலர். இதே பாணியிலான வசனங்களும், வார்த்தை திருவிளையாடல்களும் மதுரை மண்ணில் குண்டக்க மண்டக்க கொட்டிக் கிடக்கிறது.
இப்படிப்பட்டவசனங்களை இப்போது சினிமாவுக்கு தேடிப் பிடித்து கோர்த்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
விஷயத்திற்கு வருவோம். மதுரை சம்பவத்தில்இடம் பெற்ற மோசமானவங்கள்ளேயே... வசனத்தை இப்போது தான் நடித்து வரும் போடிநாயக்கனூர் கணேசன் படத்திலும் இடம் பெற வைத்துள்ளாராம் ஹரிக்குமார். அதேபோல மூடுக்கு பார்ம் ஆயிட்டோம்ல என்ற வசனத்தையும் வைத்துள்ளாராம்.
சமீபத்தில் போடி (போடிநாயக்கனூரின் 'சுருக்') பக்கம் இப்படத்தின் ஷூட்டிங் நடந்தபோது இந்த வசனங்களை ஹரிக்குமார் பேசி நடித்தபோது வேடிக்கை பார்த்த பொதுஜனங்கள் படு உற்சாகமாக கைதட்டி ரசித்தார்களாம்.
கலக்குங்க மாப்ளைகளா...!


Click it and Unblock the Notifications











