காவலனுக்காக அமெரிக்கா போன விஜய்!

வரும் டிசம்பர் 17-ம் தேதி விஜய் - அசின் நடித்த காவலன் திரைக்கு வருகிறது. இந்தப்படம் அமெரிக்காவிலும் ரிலீசாகிறது. படம் குறித்து மக்களிடம் விளம்பரப்படுத்த சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் விஜய்.
தற்போது சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அவர், பே ஏரியாவில் வரும் டிசம்பர் 16-ம் தேதி இந்தியன் கல்ச்சுரல் சென்டரில் ரசிகர்களைச் சந்திக்கிறார். அங்கிருந்து கனடாவும் அவர் செல்லக்கூடும் என்று தெரிகிறது.
இதற்கிடையே, தடையை மீறி இலங்கை போன அசினுடன் விஜய் ஜோடி போட்டுள்ளதைக் கண்டித்து அமெரிக்க வாழ் தமிழர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
Comments


Click it and Unblock the Notifications