11 Years Of Yennai Arindhaal: ரஜினி பட காட்சியை அப்படியே நடிச்சு இருக்காரே AK.. GVMன் தரமான சம்பவம்
சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் என்னை அறிந்தால். அஜித்தின் திரையுலகில் என்னை அறிந்தால் படமும் மிகவும் முக்கியமான படம். இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க, ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்திருந்தார். அனுஷ்கா மற்றும் த்ரிஷா ஆகியோர் கதாநாயகியாக நடித்திருந்தனர். பார்வதி நாயர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். விவேக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படம் வெளியாகி இன்றுடன் 11 ஆண்டுகள் ஆகும் நிலையில் ரசிகர்கள் 11 Years Of Yennai Arindhaal என்று கொண்டாடி வருகிறார்கள்.
இப்படி இருக்கையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியானது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான மூன்று முகம் படத்தில் இடம் பெற்ற காட்சியைப் போல அப்படியே இருக்கிறது. இதனால், மூன்று முகம் படத்தின் காட்சியையும் என்னை அறிந்தால் படத்தின் காட்சியையும் அப்படியே இருப்பதால், இரண்டு படத்தின் காட்சிகளையும் ரசிகர்கள் பகிர்ந்து ஃபயர் விட்டு வருகிறார்கள்.காட்சி மட்டும் இல்லாமல் வசனங்களுமே கிட்டத்த ஒரே மாதிரி இருப்பதால், சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலான டயலாக் டெலிவரி மற்றும் அஜித்தின் மாஸான எக்ஸ்பிரஷன்ஸ் என இரண்டுமே தரமாக இருப்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

அஜித் ரசிகர்கள்: இது மட்டும் இல்லாமல் மதுரை, சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் என்னை அறிந்தால் படத்தின் ரிலீஸின் போது ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆரவாரத்துடன் படத்தை கொண்டாடி மகிழ்ந்தார்கள் என்பதை பகிர்ந்து வருகிறார்கள். அதேபோல் சென்னை காசி திரையரங்கில், அஜித் ரசிகர்கள் அருண் விஜயின் நடிப்பை கொண்டாடினார்கள். ரசிகர்களின் ஆரவாரத்தைப் பார்த்த அருண் விஜய் தியேட்டரில் ரசிகர்கள் முன்னிலையிலேயே கண்ணீர் சிந்தி அழுதார்.
அருண் விஜய்: படம் முடிந்து வெளியே வரும்போது அருண் விஜய்யை தலையில் தூக்கி வைத்து கொண்டாடாத குறையாக பாராட்டி, ஆரவாரம் செய்து வழி அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோக்களையும் ரசிகர்கள் இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள். மங்காத்தா ரீ ரிலீஸை ரசிகர்கள் கொண்டாடியதைப் போல, என்னை அறிந்தால் படத்தின் ரீ ரிலீஸ்க்காக ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும்.



Click it and Unblock the Notifications











