'கான்கள்' ஆட்சி இல்லை - தேவ்கன்

Ajay
பாலிவுட்டில் கான்களின் ஆட்சி நடப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. அப்படியெல்லாம் இங்கு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார் அஜய் தேவ்கன்.

ஒரு காலத்தில் ஷாருக், ஆமிர், சல்மான் கான்களுக்குப் போட்டியாக விளங்கியவர் அஜய் தேவ்கன். இப்போது கான்களுக்கு அவர்களே போட்டியாக மாறி விட்டார்கள். இதனால் இந்தப் பட்டியலில் இப்போது அஜய் தேவ்கன் இல்லை.

சமீபத்தில் வெளியான ஆல் தி பெஸ்ட் படத்தைத் தயாரித்து ஹீரோவாக நடித்திருந்தார் தேவ்கன். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் உற்சாகமடைந்துள்ளார்.

இந்த நிலையில் ஷாருக், ஆமிர், சல்மான் கையில் பாலிவுட் இருப்பதாக கூறப்படுவதை மறுத்துள்ளார் தேவ்கன்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இது முற்றிலும் தவறு. பாலிவுட் திரையுலகை இந்த மூன்று பேரும் ஆட்சி செய்வதாக யாருமே கருதக் கூடாது.

என்னால் ஆன நல்லதை நான் இந்த திரையுலகுக்காக செய்து வருகிறேன். எனக்கு விழாக்களுக்குப் போவதெல்லாம் பிடிக்காத விஷயம். அந்த நேரத்தில் பாலிவுட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பவன் நான்.

ஆல் தி பெஸ்ட் இப்போதுதான் பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ள ஆரம்பித்துள்ளது.

என்னால் எது முடியுமோ அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன், அதை நிறைவேற்றுவற்காக கடுமையாக உழைப்பேன் என்றார் தேவ்கன்.

லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் சல்மான் கானுடன் இணைந்து தேவ்கன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X