கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் சரத்குமார் தரிசனம்

உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தங்கத் தேர் இழுத்து சிறப்பு பூஜைகளை சமத்துவ மக்கள் கட்சித்தலைவரும் நடிகருமான சரத்குமார் நடத்தினார்.
இதுபற்றி அவர் கூறுகையில், மூகாம்பிகை கோயிலில் நடைபெறும் சண்டிக ஹோமத்தில் கலந்து கொள்ள 6 மாதங்களுக்கு முன்பே பதிவுசெய்திருந்தேன். அதன்படி மனைவி ராதிகா, எனது மகனுடன் வந்து பூஜையில் கலந்து கொண்டேன்.
தங்கத்தேர் உற்சவத்தில் கலந்து கொண்டு வடம் பிடித்தேன். இங்கிருந்து கிளம்பி பெங்களூர் அருகே மடுகரையில், பழசிராஜா என்ற மலையாள பட சூட்டிங்கில் கலந்து கொள்ளப் போகிறேன் என்றார்.
Comments


Click it and Unblock the Notifications