அதிமுக கூட்டணிக்கு வர விஜய் ஏன் இவ்வளவு யோசிக்கிறார்?-ராதாரவி

By Sudha

Radharavi
சென்னை: அதிமுக பக்கம் வர நடிகர் விஜய் ஏன் இவ்வளவு யோசிக்கிறார் என்று தெரியவில்லை. அதிமுக பக்கம் விஜய் மட்டுமல்லாமல், விஜயகாந்த், சரத்குமார் போன்றோரும் வந்தால் அவர்களுக்குத்தான் நல்லது என்று கூறியுள்ளார் சமீபத்தில் அதிமுகவில் மீண்டும் இணைந்தவரான நடிகர் ராதாரவி.

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி வட சென்னை மாவட்டம் துறைமுகம் பகுதி அதிமுக சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு ராதாரவி பேசுகையில்,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பெருந்தன்மை உள்ள தலைவர். உண்மையை சொல்கிறவர்களுக்கு ஞாபகசக்தி தேவை இல்லை.

நமக்கு இனி வெற்றி கிடைக்கும் என தொண்டர்கள் நினைக்கவேண்டும். தற்போது காங்கிரஸ் கட்சி தவியாய் தவிக்கிறது. அவர்கள் அ.தி.மு.க. பக்கம் வந்தால் அவர்களுக்கு நல்லது. அடுத்து வருவது அ.தி.மு.க. ஆட்சிதான்.

விஜயகாந்த், சரத்குமார், ஜெயலலிதா சிறப்பானவர் என கருத தொடங்கி விட்டனர். அவர்கள் அ.தி.மு.க. பக்கம் வந்தால் அவர்களுக்கும் நல்லது.

தற்போது குழந்தைகளுடன் பெற்றோர்களும் பள்ளிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. கொலை, கொள்ளை நடக்கிறது. சினிமா நடிகர்கள் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். நடிகர் விஜய் அ.தி.மு.க. பக்கம் வர இவ்வளவு யோசிப்பது ஏன் என்று தெரியவில்லை.

விரைவில் 60 திரைப்பட இயக்குநர்கள், 200 தியேட்டர் உரிமையாளர்கள் அதிமுகவில் சேர உள்ளனர் என்றார் ராதாரவி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X