அஜீத் - விஜய் படப்பிடிப்பில் சந்திப்பு!

Ajith and Vijay
ஏவிஎம் படப்பிடிப்பு தளத்தில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பிலிருந்த நடிகர்கள் அஜீத் மற்றும் விஜய் சந்தித்துக் கொண்டனர். அப்போது விஜய் படப்பிடிப்பிலிருந்த டெக்னீஷியன்கள் பலர் அஜீத்துடன் நின்று படமெடுத்துக் கொண்டனர். அதே போல அஜீத்தின் உதவியாளர்களும் விஜய்யுடன் நின்று படமெடுத்துக் கொண்டனர்.

ஏவிஎம்மில், விஜய்யின் வேட்டாக்காரன் படத்துக்காக சில காட்சிகள் மாற்றி எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் கடந்த சில தினங்களாக அதில் பங்கேற்று நடித்து வருகிறார் விஜய்.

அதேபோல, அஜீத்தின் அசல் படப்பிடிப்பும் இதே ஸ்டுடியோவில் நடக்கிறது. நேற்றுமுன்தினம் அஜீத் படப்பிடிப்பில் இருந்தபோது, பக்கத்தில் விஜய்யும் படப்பிடிப்பில் இருக்கிறார் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

உடனே, விறுவிறுவென நடந்த அஜீத், வேட்டைக்காரன் படப்பிடிப்பு தளத்துக்குள் சென்றார்.

விஜய் மகிழ்ச்சியோடு அஜித் கையைப் பற்றி வரவேற்றார். இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர். பின்னர் தனியாக உட்கார்ந்து சில நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். அவரவர் நடிக்கும் கதை, படப்பிடிப்பு போன்றவை பற்றியும் பேசி தெரிந்து கொண்டனர். அதன் பிறகு அஜீத் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அப்போது, விஜய்யின் உதவியாளர்கள், டெக்னீஷியன்கள் பலரும் அஜீத்துடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதேபோல அஜீத்துடன் வந்தவர்களுடனும் விஜய் போஸ் கொடுத்தாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X