ஏவிஎம் தயாரிப்பில் மீண்டும் அஜீத்!

அந்த நன்றியை அஜீத் இன்னும் மறக்கவில்லை. அதனால்தான் அடுத்தபடம் பண்ணலாமா... என ஏவிஎம் நிறுவனம் கூப்பிட்டவுடன் அலுவலகம் போய் பேசிவிட்டு தன் ஒப்புதலைத் தெரிவித்துள்ளார் அஜீத்.
எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் ஏவிஎம் நிறுவனம் தயாரிக்கும் வித்தியாசமான படத்தில் அஜீத்தான் நாயகன். படத்துக்குப் பெயர் இன்னும் முடிவாகவில்லை. ஜனநாதன் சொன்ன கதையைக் கேட்டு மிகவும் திருப்தியடைந்த அஜீத், சிவாஜி பிலிம்ஸ் படத்துக்குப் பிறகு இதைத் தொடங்கலாம் என ஏவிஎம்மிடம் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அயன் படத்தின் தயாரிப்புப் பணிகளில் கவனம் செயலுத்தி வரும் ஏவிஎம், அடுத்தடுத்து பெரிய படங்களைத் தயாரிக்கும் திட்டத்திலுள்ளது.
சிவாஜி படத்துக்கு முன்பே விஜய் மற்றும் தனுஷை வைத்து படமெடுக்க ஆர்வம் காட்டியது ஏவிஎம். ஆனால் இருவரும் காட்டிய அலட்சியம் மற்றும் அசாதாரண காலதாமதம், திட்டமிட்டுப் படமெடுக்கும் ஏவிஎம் நிறுவனத்துக்கு ஒத்துவராததால், அந்த திட்டங்களையே கைவிட்டுவிட்டனர்.


Click it and Unblock the Notifications











