ரஜினியை மிரட்டும் 'ராசி'!

'பாபா' செண்டிமென்டை மனதில் வைத்து, குசேலனை ஆகஸ்டுக்கு முன்னதாகவே ரிலீஸ் செய்துவிடுமாறு ரஜினி கூறியுள்ளாராம். அப்படி முடியாவிட்டால் செப்டம்பர் முதல் வாரம் ரிலீஸ் செய்து கொள்ளலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜூலை 25-ம் தேதி குசேலன் ரிலீஸ் என்றுதான் முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் முடிவடையாமல் உள்ளதால், ஆகஸ்ட் முதல் வாரத்தில் ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்தார்கள்.
இதைக் கேள்விப்பட்ட ரஜினி ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய வேண்டாம் எனக் கூறிவிட்டாராம். புதிய ரிலீஸ் தேதி என்னவென்பது இந்த வாரம் தெரிந்துவிடும்.
Comments


Click it and Unblock the Notifications