அமிதாப் -40 விழா: ரஜினி, கமலுக்கு அழைப்பு!

இதற்கு முன் இப்படியொரு விழா நடந்ததில்லை என இந்தியாவே வியக்கும் அளவுக்கு பிரமாண்ட விழாவாக இதனை நடத்துகின்றனர்.
பாலிவுட்டின் அனைத்து நடிகர்களும் பங்கேற்கும் இந்த விழாவுக்கு, தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன், மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி, மோகன்லால், தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி என அனைவரையும் அழைக்கப் போகிறார்களாம்.
வரும் நவம்பர் 7-ம் தேதி இந்த விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகள் முழுவதையும் அனில் திருபாய் அம்பானி குழுமத் தலைவர் அனில் அம்பானி மேற்கொள்கிறார்.
அமிதாப் பச்சனின் புகழ்பெற்ற பாடல்கள், காட்சிகளை மேடையில் நடித்துக் காட்டுகிறார்கள் பாலிவுட் நட்சத்திரங்கள். இந்தக் குழுவில் அமிதாப்பின் மகன் அபிஷேக் மற்றும் மருமகள் ஐஸ்வர்யா ராயும் இடம் பெற்றுள்ளனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் மட்டும் அமிதாப் பச்சன் மேடையில் தோன்றி தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்.
இன்னொரு பக்கம், வரும் அக்டோபர் 11- ம் தேதி அமிதாப்பின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.


Click it and Unblock the Notifications











