திருப்போரூரில் எந்திரன்!

திருப்போரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்தக் கல்லூரியில் ரஜினிகாந்த்-ஐஸ்வர்யாராய் கலந்து கொண்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. இதனால் கல்லூரி முன்பு ஆயிரக்கணக்கில் ரசிகர்கள், பொதுமக்கள் திரண்டனர்.
முன்பு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த சிவாஜி பட சூட்டிங் திருப்போரூர் அடுத்துள்ள காலவாக்கத்தில் நடைபெற்றது. அதே போல தற்போதும் எந்திரன் படப்பிடிப்பையும் அவர் காலவாக்கத்தில் படமாக்கி வருகிறார். காலவாக்கத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியின் கலை அரங்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது.
விஞ்ஞானி ரஜினி!
சுமார் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் மத்தியில் ரஜினிகாந்த் தாடியுடன் தோன்றி பேசுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. வெள்ளை நிற சட்டையை இன் செய்து டை கட்டிக்கொண்டு நீலநிற பேண்ட் அணிந்து ரஜினிகாந்த் விஞ்ஞானி வேடத்தில் நடித்தார். ஐஸ்வர்யாராய் கருப்பு நிற உடை அணிந்து கல்லூரி மாணவியாக நடித்த காட்சியும் படமாக்கப்பட்டது.
எந்திரன் படப்பிடிப்பு நடந்ததையொட்டி கல்லூரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மாணவ, மாணவிகள், அலுவலர்கள் தவிர வேறு யாரும் கல்லூரிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. வருகிற 14-ந் தேதி வரையில் படப்பிடிப்பு நடைபெறும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications