முரளியின் 'மறு அவதாரம்'

கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்தார் முரளி.
இதனால் சினிமாவில் அவருக்கு பெரிய இடைவெளி விழுந்தது. இந்நிலையில் தற்போது மறு அவதாரம் என்ற படத்தின் மூலம் மறு பிரவேசம் செய்கிறார் முரளி. ஹீரோயினாக விலாசினி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் டத்யா எனும் புதுமுகம் அறிமுகமாகிறார்.
பிரபல இயக்குனர்கள் பலரிடம் பணியாற்றிய கே.பாலேந்தர் இந்தப் படத்தை இயக்குகிறார்.
அண்ணன் தங்கை பாசம்தான் படத்தின் மையக் கரு. சைடில் ரொமான்ஸ், சண்டை போன்ற மசாலா சமாச்சாரங்களும் உண்டாம்.
இன்னும் ஒரு பாசமலரா...!?
Comments


Click it and Unblock the Notifications