'மேதை'யாக வரும் 'கி'ராமராஜன்!

கலைமகள் கலைக் கூடம் சார்பில் எம்.குமார், டி.பழனிச்செட்டியார், பாலகிருஷ்லெடி, 'சீர்காழி' கே.சிவசங்கர், எஸ்.செல்வபிரகாஷ் ஆகியோர் தயாரிக்கும் படமான 'மேதை' என்ற படத்தின் மூலம் தனது மறுபிரவேசத்தை நிகழ்த்தப் போகிறார் ராமராஜன்.
இது அவருக்கு 44-வது படம்.
இந்தப் படத்தில் கிராமத்து பள்ளி ஆசிரியராக வருகிறார் ராமராஜன். வழக்கம்போல கிராமிய பின்னணியைக் கொண்ட இப்படத்தில் காதல், நகைச்சுவை, சண்டை என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களும் கொண்டதாக அசத்தலாக தயாராகிறதாம்.
படத்தின் முக்கிய பலமாக வடிவேலு நடிக்கிறார். இதுவரை கவுண்டமணியுடன் மட்டுமே கலக்கி வந்த ராமராஜன் இந்தப் படத்தின் மூலம் மண்ணின் மைந்தருடன் இணைந்து காமெடி பிளாஸ்ட்டுக்கு தயாராகிறார்.
புதுமுக நாயகி ஒருவர் ராமராஜனுடன் ஜோடி சேருகிறார். சார்லி, அஜய், ஹாசினி, ஸ்ரீரஞ்சினி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்துக்கு இசையமைக்கிறார், தீனா.
மதுரை அருகே மேலூரில் படப்பிடிப்பு தொடங்கி சென்னை கடலூர், புதுச்சேரி, நெய்வேலி மற்றும் பல இடங்களில் நடக்க இருக்கிறது.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார், என்.டி.ஜி.சரவணன்.


Click it and Unblock the Notifications











