மீண்டும் ராமராஜன்!

By Staff

Ramarajan
நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'மக்கள் நாயகன்' ராமராஜன் மீண்டும் பெரிய திரைக்கு வருகிறார்.

எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற வெற்றிப் படங்களின் நாயகன் ராமராஜன். தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் ஒரு காலத்தில் ராமராஜன் கொடி பட்டையைக் கிளப்பியது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசனையே ஓரம்கட்டும் அளவுக்கு செல்வாக்குடன் கொடி கட்டிப் பறந்தவர் ராமராஜன்.

இப்படி பெரும் செல்வாக்குடன் திகழ்ந்து வந்த ராமராஜன் கோடிகளில் சம்பளத்தைப் பார்த்தவர். ரஜினிக்குப் பிறகு அதிக சம்பளம் வாங்கிய நடிகராகவும் அக்காலத்தில் திகழ்ந்தார்.

கால ஓட்டத்தில் ராமராஜன் மார்க்கெட் இழந்து ஒதுங்கினார். அரசியலில் குதித்தார். எம்.பியும் ஆனார். ஆனால் திரையுலக வாழ்க்கை போல அரசியல் அவருக்கு உயர்வைத் தரவில்லை. இதனால் அரசியலிலும் அவர் ஓரம் கட்டப்பட்டார்.

சமீபத்தில், பெரும் வறுமையில் சிக்கி தவித்து வருவதாக அவரைப் பற்றி செய்திகள் கூட வெளியாகின.

இந்த நிலையில் மீண்டும் நடிக்க வருகிறார் ராமராஜன். மேதை என இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் ஹரியின் முன்னாள் உதவியாளர் சரவணன் இப்படத்தை இயக்கப் போகிறார்.

ஜோதிர்மயி, ராமராஜனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். வைகைப் புயல் வடிவேலு, மண்ணின் மைந்தருக்கு கரம் கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.

வாங்க ராசா, வந்து அசத்துங்க ராசா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X