மீண்டும் சிகப்பு ரோஜாக்கள்!

By Staff

Jeevan with Megna
கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படமான சிகப்பு ரோஜாக்கள் ரீமேக் ஆகிறது. கமல் போட்ட சைக்கோ வேடத்தை ஜீவனிடம் கொடுத்துள்ளனர்.

இது ரீமேக் காலம். படமாக இருந்தாலும் சரி, பாடலாக இருந்தாலும் எதையாவது ரீமேக் செய்தால் அல்லது ரீமிக்ஸ் செய்தால்தான் கோலிவுட்டில் திருப்திப்படுகிறார்கள்.

நான் அவனில்லை படத்தின் ரீமேக் வெற்றிக்குப் பிறகு ரீமேக் படங்கள் மீது பெரிய அளவில் கிரேஸ் பிறந்துள்ளது. அந்த வரிசையி்ல் நான் அவனில்லை படத்தை ரீமேக் செய்த அதே செல்வா, அடுத்து கமல்ஹாசனின் சிகப்பு ரோஜாக்களை ரீமேக் செய்யப் போகிறாராம்.

மாடர்ன் கதைகளிலும் என்னால் ஜொலிக்க முடியும் என பாரதிராஜா நிரூபித்த படம் சிகப்பு ரோஜாக்கள். கமல்ஹாசன், ஸ்ரீதேவி உள்ளிட்டோரின் நடிப்பும், இளையராஜாவின் இன்னிசையும், பாரதிராஜாவின் மெஜஸ்டிக் டைரக்ஷன் டச்சும் சேர்ந்து படத்தை பிரமிப்பாக்கியிருந்தன.

இப்படத்தை தற்போதைய காலகட்டத்திற்கேற்ப வித்தியாசமான கோணத்தில் கொடுக்கப் போகிறார் செல்வா. தனது பேவரைட் நடிகரான ஜீவனையே இப்படத்தில் கமல்ஹாசன் கேரக்டருக்கு தேர்வு செய்துள்ளார்.

ஸ்ரீதேவி நடித்த கேரக்டருக்குத்தான் ஆள் இதுவரை கிடைக்கவில்லையாம். தேடிக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் சிக்கி விடுவார் என்று செல்வா தரப்பு கூறுகிறது.

ஏற்கனவே நூற்றுக்கு நூறு என்ற கே.பாலச்சந்தரின் இன்னொரு ஹிட் படத்தையும் செல்வா ரீமேக் செய்து கொண்டிருக்கிறார் என்பது தெரியும்தானே.

பேசாமல், செல்வாவை ரீமேக் செல்வா என்று அழைக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X