ரஜினிக்கு 60வது பிறந்த நாள்: ரசிகர்கள் கொண்டாட்டம்
நடிகர் ரஜினியின் 60வது பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்கள் கோலாகலமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் ரஜினிக்காக சிறப்புப் பிரார்த்தனைகளும் பூஜைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
அன்னதானம், ரத்த தானம், உடல் உறுப்பு தானம் உள்ளிட்ட பல்வேறு சமூக நலப் பணிகளிலும் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தனது பிறந்த நாளின்போது வழக்கமாக வெளியூர் சென்றுவிடும் ரஜினி இம்முறை சென்னையில் தான் இருப்பதாகத் தெரிகிறது.
ஆனால், தனது பிறந்தநாளை வீட்டிலேயே மிக அமைதியாக தியானம், வழிபாடு என சிம்பிளாக முடித்துக் கொண்டார் ரஜினி. வெளி நபர்கள் யாரையும் இன்று அவர் சந்திக்கவில்லை.
முதல்வர்-துணை முதல்வர் வாழ்த்து:
ரஜினிக்கு முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், திரையுலகினர் தொலைபேசி மூலமும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
அமிதாப்பச்சன்:
இந்தி நடிகர் அமிதாப்பச்சன் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், ரஜினி தெய்வீக வாழ்க்கை வாழ்கிறார். 60 வயதைத் தொடும் அவருக்கு இது மிக விசேஷமான வருடம். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு அவர் ஒரு உதாரணம். சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருந்தாலும் அதையும் தாண்டி எளிமையாக வாழும் பண்பாளர். ரஜினியைப் போன்ற மனிதரை பார்ப்பது அபூர்வம் என்று கூறியுள்ளார்.
அதேபோல் கமல்ஹாசன், ஷாருக்கான், அபிஷேக் பச்சன், சல்மான் கான், ஐஸ்வர்யா ராய், கேத்ரீனா கைப், கரீனா கபூர், ஹேமமாலினி, ராதிகா, சரத்குமார், ராதாரவி, விஜயகுமார், வடிவேலு, அஜீத், விஜய், சூர்யா, மனோரமா, மாதவி, ஜெயப்பிரதா, ராதா, அம்பிகா, மம்முட்டி, ஜெயராம், சிரஞ்சீவி, வெங்கடேஷ், மீனா, ஜீனியர் என்டிஆர் உள்பட இந்திய திரையுலகினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ரஜினியின் பிறந்தநாள் குறித்து அவரது மனைவி லதா கூறுகையில்,
நான் அவரை குழந்தை மாதிரிதான் பார்க்கிறேன். அடிக்கடி தன்னை அவர் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்பவர். ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் அவருக்கு ஏராளமானவர்கள் போன் செய்து வாழ்த்து சொல்கின்றனர். அவர்களுக்கெல்லாம் நான் தான் நன்றி தெரிவிப்பேன். இன்றும் ஏராளமானோர் வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர் என்று கூறியுள்ளார்.
ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க


Click it and Unblock the Notifications











