twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிம்புவுக்கு அம்மா தந்த 'தண்டனை'!

    By Staff
    |

    Silambarasan
    நட்சத்திர ஹோட்டல்களுக்குப் போய் 'மிக லேட்டாக' வரும் பழக்கத்தை கைவிட வேண்டும் என்பதற்காக சிம்புவின் காரை வீட்டுக்கு வரவழைத்த அவரது தாயார் உஷா, சிம்பு நடந்தே வீட்டுக்கு வரட்டும் என்று கூறியதால் சென்னை போலீஸார் நேற்று நள்ளிரவில் அலைய நேரிட்டு விட்டது.

    சிம்புவும் அவரது தம்பி குறளரசனும், வியாழக்கிழமை இரவு தங்களது போர்ட் மான்டியோ காரில், அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு சென்றனர். நள்ளிரவைத் தாண்டிய பின்னர் வெளியில் வந்துள்ளனர்.

    அப்போது தாங்கள் வந்த காரை அங்கு காணாமல் திடுக்கிட்டுள்ளனர். கார் எங்கோ போச்சு என்ற குழப்பத்துடன் அங்கும் இங்கும் தேடிப் பார்த்துள்ளனர். சரி, யாரோ லவட்டிக் கொண்டு போய் விட்டனர் போலும் என்று நினைத்த சிம்பு, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார்.

    போலீஸார் உடனே மொபைல் ரோந்துப் படையினரை அலர்ட் செய்து காரைத் தேடுமாறு பணித்தனர். இதைத் தொடர்ந்து நகர் முழுவதும் காணாமல் போன சிம்புவின் காரைத் தேடி போலீஸார் அலையாய் அலைந்தனர். ஆனால் எங்கும் கார் கிடைக்கவில்லை.

    அப்போது போலீஸாருக்கு ஒரு சந்தேகம் வந்தது. சிம்புவின் வீட்டுக்குப் போன் செய்துள்ளனர். போனை எடுத்த அவரது தாயார் உஷா, கார் வீட்டில்தான் இருக்கிறது என்று கூறினாராம்.

    பிறகு ஏன் சிம்பு புகார் கொடுத்தார் என்று போலீஸார் குழம்பியபோது, அதையும் உஷாவே விளக்கியுள்ளார். கார் வீட்டுக்கு வந்தது சிம்பு சகோதரர்களுக்குத் தெரியாது.

    இருவரும் ஹோட்டல்களுக்குப் போய் குடித்து விட்டு தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கின்றனர். இதனால்தான் காரை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விடுமாறு டிரைவரிடம் கூறினேன். அவரும் காருடன் வந்து விட்டார்.

    இரண்டு பேரும் நடந்தே வீட்டுக்கு வந்து சேரட்டும் என்று போலீசாரிடம் கூறினாராம் உஷா. இதனை போலீசாரே பின்னர் தெரிவித்தனர்.

    டிஆர் மறுப்பு

    ஆனால் இதை சிம்புவின் தந்தையான இயக்குநர் விஜய டி.ராஜேந்தர் மறுத்துள்ளார். குறளரசன்தான் ஹோட்டலுக்குப் போனதாகவும், கார் காணாமல் போனதால் அவர்தான் புகார் செய்ததாகவும் ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், கிராண்ட் ஓரியன்ட் ஹோட்டலில் எனது இளைய மகன் குறளரசன்தான் விருந்து சாப்பிடச் சென்றான். கார் காணாமல் போனதால் அவன்தான் புகார் கொடுத்தான். கார் இன்னும் கிடைக்கவில்லை. போலீஸார் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

    சிலம்பரசன் வெளிநாட்டில் இருக்கிறார். படப்பிடிப்புக்காக போயிருக்கிறார். விருந்துக்கு அவர் வரவே இல்லை என்றார் ராஜேந்தர்.

    உண்மையில் என்னதான் நடந்ததோ? வேலனுக்கே வெளிச்சம்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X