'எங்கள் ஆசான்' விஜய்காந்த்!

இந் நிலையில் அடுத்ததாக 'எங்கள் ஆசான்' என்ற படத்தில் விஜய்காந்த் நடிக்கிறார். கலைஞானம் இயக்கும் இந்தப் படத்தை எஸ்.வி.தங்கராஜ் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் பூஜை ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் இன்று காலை நடந்தது. இதில் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுடன் கலந்து கொண்டார்.
பூஜை முடிந்த பின் நிருபர்களிடம் பேசிய விஜயகாந்த்,
பெரியண்ணா படம் எடுக்கும் போதே தங்கராஜூக்கு உதவி செய்வதென்று முடிவு எடுத்தேன். என்னிடம் பல வருடங்களாக தனது படத்தில் நடிக்க தங்கராஜ் கால்ஷீட் கேட்டு வந்தார். ஆனால், அதற்கான வாய்ப்பு அமையவில்லை.
இப்போது தான் அந்த வாய்ப்பபு வந்துள்ளது. 'எங்கள் ஆசான்' படத்தில் எனக்கும் கதாநாயகிக்கும் அடிக்கடி மோதல் நடக்கும். எதனால் எங்களுக்குள் தகராறு வருகிறது. அதை வில்லன் கோஷ்டி பயன்படுத்துகிறது என்பது 'சஸ்பன்ஸ்'.
இது நிச்சயம் அரசியல் படமல்ல. ஆனால் நிச்சயமாக பொதுப் பிரச்சினைகள் பற்றிய வசனங்கள் இடம் பெறும். வினியோகஸ்தர்களுக்கு ஆதாயம் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். அது மாதிரி படங்களில்தான் நடிப்பேன்.
படங்கள் டைரக்டு செய்யும் எண்ணம் எல்லாம் இல்லை. பழைய பாடல்களை 'ரீமிக்ஸ்' செய்வதை சிலர் எதிர்க்கிறார்கள். ரசிகர்கள் விரும்புவதை கொடுப்பதில் தவறில்லை.
மக்கள் ரசிப்பதை தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் கொடுக்கிறார்கள் என்றார்.
ஹீரோயின் உள்ளிட்ட விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லையாம்.


Click it and Unblock the Notifications











