டிவி நடிகையை மணக்கும் விக்ராந்த்!

By Staff

நடிகர் விஜய்யின் தம்பி விக்ராந்த்துக்கும் மலையாள டிவி நடிகை மானசாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் வருகிற அக்டோபர் 21ம் தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது.

'கற்க கசடற' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் விக்ராந்த். 'எங்கள் ஆசான்', 'நெஞ்சத்தை கிள்ளாதே' உள்பட பல படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இவருக்கும், மலையாள டி.வி. நடிகை மானசாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மானசா மலையாள டி.வி. தொடர்களில் நடித்திருக்கிறார். இவர், பிரபல ஒளிப்பதிவாளர் ஹேமச்சந்திரனின் மகள்.

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இது என்று விக்ராந்த் தரப்பில் கூறப்பட்டுள்ளது. விக்ராந்த்-மானசா திருமணம் சென்னை நட்சத்திர ஓட்டலில் அக்டோபர் 21-ந் தேதி நடக்கிறது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி அக்டோபர் 20ம் தேதி மாலை 6 மணிக்கு அதே ஓட்டலில் நடைபெறுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X