பாலா-பாடகி அம்ரிதா காதல் திருமணம்!

By Staff

Bala with Sandhya
நடிகர் பாலாவுக்கும் பின்னணி பாடகி அம்ரிதாவுக்கும் விரைவில் திருமணம் நடக்கிறது.

அன்பு, காதல் கிசு கிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா போன்ற தமிழ் படங்களிலும் கலாபம், பிக் பீ, எஸ்.எம்.எஸ் போன்ற மலையாளப் படங்களிலும் நடித்தவர் பாலா.

சமீபத்தில் மலையாள தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ஸ்டார் சிங்கர் என்ற நிகழ்ச்சியில், இவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பின்னணி பாடகி அம்ரிதாவை சந்தித்தார். இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. நட்பு, காதலானது

அம்ரிதா, ஏராளமான மேடை கச்சேரிகளிலும், மலையாளப் படங்களிலும் பாடியிருக்கிறார். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து பெற்றோரிடம் தெரிவித்தனர்.

பாலாவின் விருப்பத்தை மறுக்காமல் ஏற்றுக்கொண்ட பெற்றோர், எர்ணாகுளத்தில் உள்ள அம்ரிதாவின் பெற்றோர்களைச் சந்தித்து பேசி திருமணத்தையும் முடிவு செய்துவிட்டனர்.
பாலா-அம்ரிதா திருமணம் சமீபத்தில்தான் நிச்சயிக்கப்பட்டது.

அம்ரிதா இப்போது, பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார். முடிவுகள் வெளியான கையோடு கெட்டிமேளம் கொட்ட இரு தரப்பு பெற்றோரும் முடிவு செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X