கன்னடத்துக்குப் போகும் அர்ூஜன்

கர்நாடகத்துக்காரரான அர்ஜூன் தமிழில் ஆக்ஷன் கிங் ஆக அசத்திக் கொண்டிருக்கிறார். அதிரடி வேடங்களுக்குப் பெயர் போன அர்ஜூன், தனது படங்களில் தேசப் பற்றையும் வெளிப்படுத்தத் தவறியதில்லை.
தமிழில் பிசியாக இருந்த கால கட்டத்தில் கன்னடத்தில் நடிக்காமல் இருந்து வந்தார் அர்ஜூன். அவ்வப்போது அங்கும் தலை காட்டுவதை பின்னர் வழக்கமாக்கிக் கொண்டார்.
இந்த நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக அர்ஜூன் கன்னடத்தில் நேரடியாக நடிக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் கன்னடத்திற்குத் திரும்பவுள்ளார் அர்ஜூன்.
ராகவேந்திர ராவ் இயக்கத்தில் புதிய கன்னடப் படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார் அர்ஜூன். இது அவருக்கேற்ற மாதிரியான அதிரடியான வேடமாம்.
இதுதவிர மீண்டும் இயக்குநராக கலக்க தீர்மானித்துள்ளார் அர்ஜூன். இதற்காக தனது சொந்தப் பட நிறுவனத்திற்கு உயிர் கொடுத்து அதன் மூலம் நடிக்கவும், இயக்கவும் திட்டமிட்டுள்ளாராம் அர்ூஜன்.


Click it and Unblock the Notifications











