மகன் தயாரிக்க மீண்டும் நடிகராகிறார் சிரஞ்சீவி!

ஆனால் மகாதீரா வெற்றிக்குப் பின் அவரது மகன் ராம் சரண் தேஜாவின் மார்க்கெட் உச்சத்துக்குப் போய்விட்டது.
குறுகிய காலத்திலேயே ஸ்டார் நடிகர்கள் வரிசையில் ராம் சரண் தேஜா சேர்ந்து விட்டார். இந்த நிலையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கும் நடிக்கும் ஆசை வந்துவிட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள எந்திரன் படத்தின் தெலுங்குப் பதிப்பான ரோபோ இசை வெளியீட்டு விழா சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது.
அந்த விழாவில் 'நடிகர் ரஜினிகாந்தைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. நானும் மீண்டும் நடிக்கப் போகிறேன்' என்று சிரஞ்சீவி அறிவித்தார்.
ரஜினியும் சிரஞ்சீவிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தது நினைவிருக்கலாம்.
சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்தின் வேலைகள் துவங்கியுள்ளன. இதில் அவருக்கு இரண்டு ஹீரோயின்கள். படத்தை மகன் ராம் சரண் தேஜாவே தயாரிக்கிறார். மற்ற விவரங்களை இந்த வாரம் வெளியிடுகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











