மாப்பிள்ளை பாடல்... ஒரிஜினலைக் கெடுத்த தனுஷ்!

By Shankar

என்னதான் ரஜினியின் மருமகன் என்றாலும், அவர் சினிமாவில் செய்யும் சில சமாச்சாரங்கள் ரஜினி ரசிகர்களை மகா கடுப்படிக்க ஆரம்பித்துள்ளன.

ரஜினி நடித்து, வசூலில் பிளாக்பஸ்டர் என்று பேசப்பட்ட படம் மெகா ஹிட் படம் மாப்பிள்ளை. இப்போது பார்த்தாலும் புத்தம் புதிதாகத் தெரியும் படம். இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம் இசைஞானி இளையராஜாவின் இசை. எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்.

குறிப்பாக 'என்னோட ராசி நல்ல ராசி...' பாடல் அசத்தலாக இருக்கும் இந்தப் படத்தில்.

இப்போது, இந்தப் படத்தை ரஜினியின் மருமகன் தனுஷ் ரீமேக் செய்துள்ளார். 'படிக்காதவன்' என்ற ரஜினியின் இன்னொரு பிளாக்பஸ்டர் பெயரைக் கெடுத்த சுராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், 'என்னோட ராசி நல்ல ராசி' பாடலை ரீமிக்ஸ் பண்ணியிருக்கிறார்கள். ரீமிக்ஸ் என்ற பெயரில் அந்தப் பாடலை குதறி வைத்திருக்கிறார்கள் என்பதே பொருத்தமாக இருக்கும்.

மோசமான இசை, பழைய குரலைப் பயன்படுத்தும் நினைப்பில் அதைக் கேவலமாகக் கையாண்ட விதம்... என எல்லா வகையிலும் ஒரிஜினலக் கெடுத்துள்ளனர் (இசை மணிசர்மா).

இந்தப் பாடலைக் கேட்ட பல ரஜினி ரசிகர்களும் தனுஷை தங்களால் முடிந்த வரை அர்ச்சனை செய்யத் தொடங்கியுள்ளதே, இந்தப் பாடல் அவர்களை எந்த அளவுக்கு கடுப்பேற்றியுள்ளது என்பதற்குச் சான்று!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X