தனுஷின் ரீமிக்ஸ் செண்டிமெண்ட்!

By Staff

Dhanush with Tamanna
பொல்லாதவன், யாரடி நீ மோகினியில் தொடர்ந்து ரீமிக்ஸ் பாடல்கள் இடம் பெற்றன. படமும் பெரும் வெற்றி பெற்று சிம்பு-தனுஷ் ரேஸில், தனுஷை மிகமிக முன்னுக்குக் கொண்டு போய்விட்டது.

இந்த செண்டிமெண்டை விட முடியாத தனுஷ், இப்போது தனது அடுத்த படமான படிக்காதவனுக்கும் ஒரு ரீமிக்ஸ் பாடலைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

தனுஷ், தமன்னா நடிக்கும் இந்தப் படம், காமெடி, அதிரடி, ரொமான்ஸின் சரியான கலவையாக வந்துள்ளதாம். இதற்கேற்ற ஒரு பாடல் அமைவது கஷ்டமாக இருக்கிறதாம் (ஒரிஜினலாப் போட்டவங்க கூட இப்படியெல்லாம் யோசிச்சிருக்க மாட்டாங்க போல!)

இதுகுறித்து இயக்குநர் சுராஜ் கூறியதாவது:

தனுஷ் படங்களில் பழைய பாடல் ஒன்றின் ரீமிக்ஸ் பாடல் இடம்பெறுவது வழக்கமாகிவிட்டது. செண்டிமெண்ட்தான் என்றாலும், படத்தின் வெற்றி சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் சாதாரணமாக விட்டுவிட முடியவில்லை.

தனுஷுக்கு காமெடியும் நன்றாக வரும் என்பதை நிரூபிக்கப் போகும் படம் இது. இதில் தனுஷின் அப்பாவாக பிரதாப் போத்தன் நடித்துள்ளார். இருவரும் வரும் காட்சிகளில் காமெடி அதிகமாக இருக்கும்.

அப்பாவை காமெடியால் சித்திரவதை செய்யும் வேடத்தில் தனுஷ் நடித்திருக்கிறார். படத்தில் விவேக்கின் காமெடியும் உண்டு. வில்லனாக சுமன் நடித்துள்ளார் என்கிறார் சுராஜ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X