நல்ல இயக்குநர் கிடைக்கவில்லை!ஜெய் ஆகாஷ்

தமிழ், தெலுங்கு மொழிகளில் கிட்டத்தட்ட 33 படங்களில் நடித்திருப்பவர் ஜெய் ஆகாஷ். ஆனால் அவர் எதிர்பார்த்த பெரிய பிரேக் தமிழில் கிடைக்கவில்லை என்ற பெரும் குறை அவருக்கு.
தற்போது அடடா என்ன அழகு எனும் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து காதலன் காதலி எனும் புதுப்படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் இயக்குநரும் ஆகாஷ்தான்.
தனது முதல் இயக்குநர் முயற்சி குறித்து நிருபர்களிடம் ஜெய் ஆகாஷ் கூறியதாவது:
இந்தப் படம் ஒரு மாறுபட்ட கதையமைப்பில் உருவாகி வருகிறது. முதல் முறையாக நானே இயக்குநராகவும் மாறியிருக்கிறேன் இந்தப் படத்துக்காக.
நான் நிறைய படங்களில் நடித்தாலும் தெலுங்கில் அமைந்த அளவுக்குக் கூட தமிழில் பெரிய ஹிட் கிடைக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் ஒரு நல்ல இயக்குநர் எனக்கு அமையாமல் போனதுதான். அதன் விளைவுதான் நானே இயக்குநராகிவிட்டேன்.
இதுவரை எனக்குப் பிடிக்காத கதைகளில் கூட நடித்தேன். காரணம் இயக்குநரின் கட்டளை அது. அந்தப் படங்களை தவிர்க்கவும் முடியாது. காரணம் படங்களைத் தேர்ந்தெடுக்கும் நிலையிலும் அப்போது இல்லை. பீல்டில் இருக்க வேண்டுமே என்பதால் அந்தப் படங்களில் நடிக்க வேண்டியிபருந்தது. ஆனால் காதலன் காதலி வெளியான பிறகு இந்த நிலை மாறும். நல்ல இயக்குநர்கள் என்னையும் தேடி வருவார்கள் என நம்புகிறேன், என்றார் ஜெய் ஆகாஷ்.
இந்தப் படத்தில் ஆகாஷூக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர் டெய்ஸி போபண்ணா. இந்தியில் சில படங்கள் நடித்துள்ளார். மற்றொரு ஜோடி நிதி சுப்பையா... பக்கா கன்னட நடிகை. குடகு நாட்டில் ரொம்பப் பிரபலமாம் அம்மணி.
பிரஸ்மீட்டுக்கு வந்திருந்த நிதி இப்படிச் சொன்னார்:
அருமையான கதை. எனக்குக் கிடைத்துள்ள முதல் (தமிழ்) இயக்குநரும் அருமை. இதனால் ரொம்ப சுதந்திரமா நடிக்க முடியுது. இந்தப் படம் எனக்கு நிச்சயம் நல்ல பெயரைத் தரும், என்றார்.
தாய்க்குலத்தோட வாக்குதான் ரொம்ப முக்கியம்!


Click it and Unblock the Notifications











