துபாயில் கமல் -50: காணிக்கை ரூ.2 கோடி!

இதைச் சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்த துபாயின் பிரபல தொழிலதிபர் ஒருவர் கமல்ஹாசனிடம் தனது யோசனையைத் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஒப்புக்கொண்ட கமல்ஹாசன், துபாயில் கமல்-50 எனும் பெயரில் இந்த நிகழ்ச்சியை நடத்த ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கமலுக்கு ரூ.2 கோடி காணிக்கையாகத் தரப்படுகிறது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலைநிகழ்ச்சிகள் எதிலும் தான் பங்கேற்க முடியாது என தெளிவாகக் கூறிவிட்டாராம் கமல்.
கமல்-50 விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்திப் படவுலகைச் சேர்ந்த திரைப் பிரபலங்கள் பலரையும் பங்கேற்க வைக்கும் திட்டத்தில் உள்ளார் அந்தத் தொழிலதிபர்.
வருகிற நவம்பர் மாதம் இந்த விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications